தாயை பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டு இந்தியா விரைந்த இளைஞர்! ஊரடங்கால் அங்கு அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
https://www.maalaimalar.com/news/national/2020/05/25201152/1543990/Son-leaves-job-in-Dubai-to-meet-his-mother-gets-news.vpf
டெல்லியைச் சேர்ந்தவர் ஆமிர் கான். 30 வயது நிறைந்த இவர் கடந்த 6 வருடமாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. தற்போது கொரோனோவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டநிலையில், வெளிநாட்டில் இருப்பவர்களும் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது. அப்பொழுது துபாயில் இருந்த ஆமிர்கானும் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததை முன்வைத்து இந்தியா வர அனுமதி பெற்றார். அதனைத் தொடர்ந்து இந்தியா வந்த அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கிடையே வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, சொந்த செலவில் 7 நாட்கள் தனிமைப்படுத்தவேண்டும். பின்னர் ஏழு நாட்கள் அவர்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் முதல் 7 நாட்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஏழு நாட்கள் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆமிர்கான் அம்மாவின் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுதுகூட ஆமிர்கானை அனுதிக்கவில்லை.
தாயை பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டு வந்தும், இறுதியாக இறந்த தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாததால் ஆமிர் கான் கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.