விமானத்தை நெருங்கும் ஆம்னி பேருந்து கட்டணம்; இவுங்க அலும்புக்கு எண்ட் கார்டே இல்லையா?.. குமுறும் சாமானிய மக்கள்.!
விமானத்தை நெருங்கும் ஆம்னி பேருந்து கட்டணம்; இவுங்க அலும்புக்கு எண்ட் கார்டே இல்லையா?.. குமுறும் சாமானிய மக்கள்.!
தலைநகர் சென்னையில் தென்மாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர எதுவாக கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும். தனியார் சொகுசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் பேருந்துகளின் கட்டணம் கடுமையான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் எங்களுக்கு ஈடு செய்யும் தொகையை கட்டணமாக நிர்ணயம் செய்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் நிலையில், குறைந்தபட்சமாக ரூ.1,200 முதல் ரூ.5 ஆயிரம் வரை நிர்ணயம் செய்துகொள்ளப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.2500, கோவைக்கு ரூ.2800, நெல்லைக்கு ரூ.3300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சிக்கு ரூ.2700 என கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அவை முந்தைய கட்டணங்களில் இருந்து ரூ.500 முதல் 1000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்ய கூடாது என அரசு எச்சரித்து இருந்தாலும், அதனை வாகனத்தின் ஓட்டுனர்கள் கேப்பதாக தெரியவில்லை என்பதையே கட்டண உயர்வு விபரம் உறுதி செய்கிறது. ஆம்னி பேருந்துகள் என்றாலே செல்வந்தர்களுக்கு மட்டுமே என்ற நிலை ஒருசில ஆண்டுகள் மாறி பலரும் அதனை உபயோகம் செய்து வந்தனர். தற்போதைய நிலை மீண்டும் அதனை தலைகீழாக மாற்றிவிடுகிறது.