அடக்கொடுமையே! காதலிக்காக மதம் மாறிய காதலன்.. தலைமறைவான காதலி கர்ப்பமான செய்தி கேட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.!
அடக்கொடுமையே! காதலிக்காக மதம் மாறிய காதலன்.. தலைமறைவான காதலி கர்ப்பமான செய்தி கேட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.!
சேலம் மாமாங்கம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் அதேப் பகுதியை சேர்ந்த வேறு மத பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் காதலியின் வேண்டுகோளுக்குயிணங்க ஸ்ரீதர் மதம் மாறி தனது பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பெற்றோர் பார்த்து வேறு நபருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை அறியாத காதலன் ஸ்ரீதர் அவரை தேடிவந்துள்ளார். அப்போது அவருக்கு காதலியின் புது செல்போன் நம்பர் கிடைக்கவே அதை தொடர்பு கொண்டு காதலியிடம் பேசி உள்ளார். அப்போது அவர்தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீதர் நகை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சாருக்கு தகவல் தெரிவிக்கவும் அங்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.