×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சம்பளத்தை வாங்கிக்கொண்டு, இரண்டாவது மனைவி செய்த காரியம்! ஆத்திரத்தில் துடிதுடிக்க கணவர் அரங்கேற்றிய கொடூரம்!

husban killed wife in money issue

Advertisement

நாமக்கல் மாவட்டம் பெரியபட்டியில் வசித்து வருபவர் பரமானந்தம். லாரி டிரைவரான இவரது முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு  இறந்துவிட்டார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மயிலாத்தாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் வேலைக்கு சென்று வந்து பரமானந்தம் கொடுக்கும் எல்லா பணத்தையும் வாங்கிகொள்ளும் மயிலாத்தாள் அதற்கு சரியான கணக்கை பரமானந்தனிடம் காட்டாததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வாறு நேற்றும் பணம் தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 இதில் ஆத்திரமடைந்த பரமானந்தம் அங்கிருந்த சுத்தியலை எடுத்து  தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மயிலாத்தாள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மயிலாத்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பரமானந்தத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#money #issue #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story