×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பொழுதெல்லாம் மச்சான் புராணம் பாடிய மனைவி"... விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு.!

பொழுதெல்லாம் மச்சான் புராணம் பாடிய மனைவி... விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு.!

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 33 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கரும்பு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். 33 வயதான இவர் ரயில்வேயில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தினேஷுக்கு பிரதீபா என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான நாளிலிருந்து தனது அக்கா கணவரின் புகழ் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் பிரதீபா.

கடந்த 8 மாதங்களாக எப்போது பார்த்தாலும் தனது அக்கா கணவரை புகழ்ந்து பேசி வந்ததால் பிரதீபா மற்றும் தினேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். எனினும் பிரதீபா தனது அக்கா கணவரின் புராணம் பாடுவதை நிறுத்தவில்லை . இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கா கணவரை புகழ்ந்து பேசியதால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Tiruvallur #suicide #Husband died #domestic violence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story