மனைவியுடன் சண்டையிட்டு பைக்கில் வெளியே சென்ற புதுமாப்பிள்ளை.! இரவில் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Husband fight with his wife suside
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடங்கள் ஆன நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி பவித்ரா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதனை அடுத்து அபிஷேக் சில நாட்கள் கழித்து தனது மனைவியை சமானதப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அழைத்து வந்த அன்றே மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அபிஷேக் கோபத்தில் தனது பைக்கை எடுத்து கொண்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதறிய உறவினர்கள் அபிஷேக்கை தேடியுள்ளனர். அப்போது இரவு 9 மணியளவில் அரக்கம்பை கிராமத்துக்கு செல்லும் வழியில் அபிஷேக் பைக் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி கல்பாறை என்னும் பகுதியில் உள்ள கற்பூர மரத்தில் அபிஷேக் தூக்கில் தொங்கி உயிரிழந்து கிடந்துள்ளார். அதனை அடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.