மனைவி மற்றும் மச்சினி பெயரில்... போலி ஆபாச ஃபேஸ்புக் கணக்கு... சைபர் கிரைமில் சிக்கிய கணவர்.!
மனைவி மற்றும் மச்சினி பெயரில்... போலி ஆபாச ஃபேஸ்புக் கணக்கு... சைபர் கிரைமில் சிக்கிய கணவர்.!
தென்காசி மாவட்டத்தில் மனைவியின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி அதன் மூலம் ஆபாச படங்களை பதிவேற்றி வந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்மணியின் கணவர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மற்றும் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் அவரைப் பழி வாங்குவதற்காக முகநூலில் தன் மனைவியின் பெயரில் போலி கணக்குகளை துவக்கி இருக்கிறார். மேலும் மனைவியின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு துவங்கப்பட்ட இந்த கணக்கில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து வந்திருக்கிறார். இதே போல் தனது மனைவியின் சகோதரி பெயரிலும் போலி கணக்குகளை துவங்கி ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக தனது மாமனாருக்கு போன் செய்து உங்களின் இரு மகள்களும் பேஸ்புக்கில் ஆபாச கருத்துக்களை பரப்பி வருவதாக அனைவரிடமும் தெரிவிப்பேன் எனவும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுகுறித்து வாசுதேவனின் மாமனார் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர் .