கணவன் மனைவி செய்த செயலால் திகைத்துப்போன ஆதரவற்ற பெண்!! காவலருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்!
கணவன் மனைவி செய்த செயலால் திகைத்துப்போன ஆதரவற்ற பெண்!! காவலருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி வயது (55). இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து, தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் எப்போதும் போலவே வீட்டை பூட்டி விட்டு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்த போது தன் வீட்டின் ஓடு திறந்திருப்பதை பார்த்த ராசாத்தி சற்றே திகைத்து போனார். பின்னர் அவரது பெட்டியில் உள்ள 7 பவுன் நகை, 3 வெள்ளிக் கொலுசு, ரூ. 40,000 போன்றவை திருடப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ராசாத்தி போலிஸில் புகார் அளித்துள்ளார். இவர் கூறியதாவது, திருட்டு சம்பவம் நடந்த அதே நாளில் தனது வீட்டின் அருகே வசிக்கும் பழனிச்சாமி என்பவர் அடிக்கடி என்னை நோட்டமிட்டு கொண்டிருந்தாக கூறியுள்ளார். பின்னர் போலிஸார் பழனிச்சாமியின் செல்போன் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அவர் நகைகளை விற்க அடிக்கடி வெளியில் சென்றுள்ளார் என தெரியவந்தது.
பின்னர் பழனிச்சாமியை சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை மேற்கொண்ட போது, பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது. மேலும் இந்த தம்பதியிடமிருந்து நகை, வெள்ளிக்கொலுசுகள் மற்றும் அரைஞான் கொடிகளை போலிஸார் கைப்பற்றி, பின்னர் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு சம்பவம் நடந்த 1 மாதத்தில் போலிஸ் கண்கானித்து திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை பிடித்ததால் அப்பகுதி கிராம பொதுமக்கள் போலிஸாரை பாராட்டினர்.