100 நாள் வேலைத்திட்டத்தில் இதை செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது..! கடைசி தேதி இதுதான்..!! மறந்துடாதீங்க..!!
100 நாள் வேலைத்திட்டத்தில் இதை செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது..! கடைசி தேதி இதுதான்..!! மறந்துடாதீங்க..!!
கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு அரசு சார்பில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் சாலைகள் போன்றவற்றை சுத்தப்படுத்தி வைக்கும் 100 நாள் வேலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவருக்கு மாதாமாதம் அவர்களின் வங்கி கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலைதிட்டத்தில் ஊதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டு துறை தெரிவித்து இருக்கிறது.
தற்போது வரை 42 லட்சம் பேர் ஆதாருடன் 100 நாள் வேலைத்திட்டத்தோடு இணைக்கவில்லை என்றும், மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.