சுஜித்தை மீட்க களத்தில் இறங்கிய ஐஐடி! குழந்தையை மீட்கும் திக் திக் நிமிடங்கள்!
IIT involves to save sujith from bore well
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நாடுகட்டுப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த அந்தோணி தாஸ் - மேரி இவர்களின் இரண்டு வயது குழந்தை சுஜித் நேற்று மாலை 5.45 மானியாவில் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
இந்நிலையில் கடந்த 9 மணி நேரமாக நடைபெற்றுவரும் மீட்பு பணியில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. முதலில் மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது கருவி மூலம் முயற்சித்தார். அவரது முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதனை அடுத்து கோவையை சேர்ந்த மீட்பு குழு ஓன்று மணிகண்டனுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கியது. அந்த முயற்சியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பக்கவாட்டில் குழி தோண்டுவதிலும் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை சுஜித்தை மீட்க ஐஐடி தொழிநுட்ப வல்லுநர்கள் களத்தில் இறங்கியுள்னனர். ஆக்சிஜன், கேமிரா, வாக்கிடாக்கி போன்ற அம்சங்களுடன் உருளை போன்ற ஒரு அமைப்பை கொண்டு அந்த குழு மீட்பு பணியில் இறங்கியுள்ளது. இந்த முயற்சியிலாவது சுஜித் மீட்கப்படுவாரா என தமிழகமே ஆவலுடன் பார்த்துவருகிறது.