#JUSTIN: சண்டே கொண்டாட்டத்தில் ஓவர் குடி.. 19 வயது கல்லூரி மாணவி மரணம்.. சென்னையில் ஷாக்.!
#JUSTIN: சண்டே கொண்டாட்டத்தில் ஓவர் குடி.. 19 வயது கல்லூரி மாணவி மரணம்.. சென்னையில் ஷாக்.!

அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்த மாணவி மரணம் அடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில், பிரபலமான தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பிசிஏ துறையில், 19 வயதுடைய மாணவி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: 14 வயது மாணவரை மிரட்டிய எச்.எம்.. தூக்கில் தொங்கிய சிறுவன்.. சென்னையில் சோகம்.. தாய் குமுறல்.!
வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில், எப்போதாவது மாணவி ஏகாட்டூர் பகுதியில் ரிக்கும் தோழியின் விடுதி அறைக்கு சென்று வருவது வழக்கம் என சொல்லப்படுகிறது.
அளவுக்கு அதிக மது உயிரை பறித்தது
இந்நிலையில், சம்பவத்தன்று தனது தோழியின் விடுதிக்கு சென்ற மாணவி, நேற்று இரவு மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான மதுவை அவர் எடுத்துக்கொண்டதாக தெரியவருகிறது.
இதனால் அவர் திடீரென வாந்தி ஏற்பட்டு மயங்கவே, தோழியின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் மரணத்தை உறுதி செய்தனர்.
இந்த விஷயம் குறித்து கேளம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆணோ, பெண்ணோ உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பொருட்களை கையில் எடுத்தால் அது இன்றில்லையெனினும், என்றேனும் கட்டாயம் பக்க விளைவுகளை தரவல்லவை. கெத்து, மப்பு, கொண்டாட்டம் என எந்த வயதிலும் தறிகெட்டு போதை குடி, புகை என திரிந்தால், கட்டாயம் ஒருநாள் அதன் வலிகளை சுமக்க வேண்டிய நாள் வரும் எனப்தையும் மறக்க வேண்டாம்.
இதையும் படிங்க: #Breaking: தந்தை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை.. வாட்ஸப்பில் தகவல்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்.. சென்னையில் பயங்கரம்.!