×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம் செய்த ஓராண்டில் கணவர் வீட்டில் சடலமாக பெண்.. "பத்துப் பாத்திரம் தேய்த்து மகளை கவனித்தேனே" - தாய் குமுறல்.!

காதல் திருமணம் செய்த ஓராண்டில் கணவர் வீட்டில் சடலமாக பெண்.. பத்துப் பாத்திரம் தேய்த்து மகளை கவனித்தேனே - தாய் குமுறல்.!

Advertisement

மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்த நிலையில், உறவினர்கள் ஒன்று சேர்ந்து மகளை அழைத்துவந்து திருமணம் செய்து, இன்று அவரை கொன்றுவிட்டனர் என தாய் கண்ணீருடன் தனது மகளின் உயிரிழப்பால் சோகத்தில் தன்னிலையை விவரித்தார்.

சென்னையில் உள்ள ஆவடி, ஜீவானந்தம் தெரு, காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் உறவுக்கார பெண்மணி பியூலா. ராஜ்குமார் - பியூலா காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டனர். 

மர்ம மரணம்

திருமணத்தை தொடர்ந்து ராஜ்குமார் தனது தந்தை, தாய், சகோதரர், தங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று பியூலா தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்தார். இதனைக்கண்ட உறவினர் கூச்சலிடவே, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் ஆவடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: 22 வயதில் இளம் ரௌடி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நபர்கள் யார்? ஆவடியில் பரபரப்பு சம்பவம்.!

காவல்துறை விசாரணை

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பியூலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் கழுத்தில் தழும்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. மர்ம மரணம் குறித்து பியூலாவின் கணவர் ராஜ்குமார் உட்பட கணவர் தரப்பு உறவினர்களிடம் விசாரணை நடந்தது. மகளின் மரணம் குறித்து தகவல் அறிந்த பியூலாவின் தாய் அண்ணா குமாரி, ஆந்திராவில் இருந்து ஆவடி வந்தடைந்தார். 

தாய் குமுறல்

அங்கு செய்தியாளர்களிடம் கண்ணீர் பட அவர் தெரிவித்த தகவலாவது, "மகளின் இறப்புக்கு காரணமாக இருந்த மாமனார், அவரின் இரண்டு மகன்களை தூக்கிலிட வேண்டும். இல்லையேல் நான் உயிர்துறப்பேன். நான் ஹோட்டலில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு கணவர் இல்லை. மகளை நெல்லூரில் பட்டப்படிப்பு படிக்க வைத்தேன். அவரின் மனதை மாற்றி சென்னை அழைத்துவந்து திருமணம் செய்துகொண்டனர். 

இறுதியாக எனது மகளிடம் ஜன.03 அன்று பேச முயற்சித்தேன். அப்போது, கணவரின் அண்ணன் பிரேம்குமார் என்பவர், தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் என கூறினார். இன்று என் மகள் என்னுடன் இல்லை" என தெரிவித்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டு வாசலில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போதையில் துணிகரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #love marriage #avadi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story