வீட்டுக்குள் புகுந்த ரௌடியை தீர்த்துக்கட்டிய 6 பேர் கும்பல்; சென்னையில் பயங்கரம்.!
வீட்டுக்குள் புகுந்த ரௌடியை தீர்த்துக்கட்டிய 6 பேர் கும்பல்; சென்னையில் பயங்கரம்.!
சென்னையில் உள்ள காசிமேடு, திடீர்நகர், மூன்றாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (வயது 33). இவரின் மீது காசிமேடு துறைமுக காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நேற்று லோகநாதன் - அவருடன் வாழ்ந்து வரும் பெண்மணி மாலதி (வயது 48) ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இருவரும் வீட்டில் இருந்தபோது, திடீரென திரைப்பட பாணியில் வீட்டிற்குள் நுழைந்த 6 பேர் கும்பல், லோகநாதனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. மேலும், அவருடன் இருந்த மாலதிக்கும் வெட்டு விழுந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
சரமாரியாக வெட்டிக்கொலை
இவர்களை பார்த்ததும் கும்பல் தப்பியோடிய நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, லோகநாதன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், மாலதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற தந்தை; சேலத்தில் பரபரப்பு சம்பவம்.. காரணம் என்ன?
விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக தேசியா என்ற ரௌடி கொல்லப்பட்ட நிலையில், அவ்வழக்கில் லோகநாதனின் பெயரும் இருந்துள்ளது. இதனால் தேசியாவின் உறவினர்கள் பழிக்குப்பழியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயதில் பப்பி லவ்.. காதல் தகராறில் 18 வயது கல்லூரி மாணவர் குத்திக்கொலை.!