சென்னை: லிப்டில் ஊழியருக்கு காத்திருந்த எமன்; உடல் நசுங்கி இளைஞர் மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
சென்னை: லிப்டில் ஊழியருக்கு காத்திருந்த எமன்; உடல் நசுங்கி இளைஞர் மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
லிப்ட் அறுந்து விழுந்து ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில், புதிய லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: லாரி சக்கரத்தில் சிக்கி 51 வயது பெண் பரிதாப பலி.!
இன்று பிற்பகல் தொடங்கி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணியில் லிப்ட் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, பழைய லிப்டின் இரும்பு கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
நபர் மரணம்
இந்த சம்பவத்தில் ஊழியரின் உடல் நசுங்கி, அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் ஷியாம் சுந்தர் என்பது உறுதி செய்யப்பட்டது. மேற்படி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; யார் அந்த சார்? தெரிந்தது உண்மை? குற்றப்பத்திரிகையில் தகவல்.!