எனக்கு திருமணம் ஆகிருச்சு.. போனில் ஷாக் செய்தி சொன்ன காதலன்., தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்.!
எனக்கு திருமணம் ஆகிருச்சு.. போனில் ஷாக் செய்தி சொன்ன காதலன்., தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்.!
சென்னையில் உள்ள போரூர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தில் வசித்து வந்த பிரகாஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த பிரகாஷ், ரூ.2 இலட்சம் வரை பணம் பறித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஹவாலா பணம் எடுத்து வருவோரை குறிவைத்து மோசடி; காவலர், வருமானவரித்துறை அதிரடி கைது.!
தீக்குளித்து தற்கொலை
இதனிடையே, கடந்த 31ம் தேதி தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என கூறி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன பெண்மணி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் காவல்துறையினரிடம் பெண் மரண வாக்குமூலம் பதிவு செய்யவே, பிரகாஷை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்கார விவகாரம்; தோழி அதிரடி கைது.!