"புயலா, மழையா என்னை ஒன்றும் செய்யாதடி" - டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள் குஷியோ குஷி..!
புயலா, மழையா என்னை ஒன்றும் செய்யாதடி - டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள் குஷியோ குஷி..!
அரசு டாஸ்மாக் கடையில் புயலை கண்டுகொள்ளாத மக்கள், மதுபானம் வாங்குவதில் ஆர்வம் கொண்டனர்.
கரையை கடக்க தொடங்கியது
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் கனமழை பெய்து வந்த நிலையில், புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் இன்று இரவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய சென்னை விமான நிலையம்.. நாளை வரை அதிகாரபூர்வ மூடல்.. இண்டிகோ விமானியின் மாஸ் செயல்.!
தாழ்வான இடங்களில் வெள்ள
இதனால் சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு அம்மா உணவகத்தில் இலவச உணவுகள் வழங்குவதாக அறிவித்தது. வெள்ளம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த மக்கள் முகாம்களுக்கு மீட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரயில், விமான சேவை பாதிப்பு
சென்னை புறநகர் இரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்திலும் மழை காரணமாக வெள்ளநீர் தேங்கி, நாளை அதிகாலை 4 மணிவரையில் விமான நிலையம் மூடப்பட்டது.
டாஸ்மாக் நோக்கி
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடையில், கடைக்கு வெளியே வெள்ளநீர் தேங்கியிருந்தபோதிலும், மழையோ, புயலோ என்ன வந்தால் என்ன? என டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க குடிமகன்கள் குவிந்தனர். இந்த விஷயம் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆசையாக தங்க நகை கேட்ட மனைவி.. பக்கத்துவீட்டு பெண்ணின் கழுத்தில் கைவைத்த இளைஞன்.. தாம்பரத்தில் பகீர்.!