ரௌடியை கொன்றது ஏன்? 5 ஆண்டு பகைக்கு பழிதீர்த்து முற்றுப்புள்ளி வைத்த பயங்கரம்.! கத்தி எடுத்து கத்தியால் அழிந்த துயரம்.!
ரௌடியை கொன்றது ஏன்? 5 ஆண்டு பகைக்கு பழிதீர்த்து முற்றுப்புள்ளி வைத்த பயங்கரம்.! கத்தி எடுத்து கத்தியால் அழிந்த துயரம்.!

சென்னையில் உள்ள அண்ணா நகர், அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் எட்வின். இவரின் மனைவி பூங்கொடி. தம்பதிகளுக்கு ராபர்ட், ஜோசப், மோசஸ் என 3 மகன்கள் இருக்கின்றனர். மூவருமே குற்றச்செயலில் ஈடுபட்டு, அப்பகுதியில் ரௌடியாக வலம்வந்து இருக்கின்றனர்.
ராபர்ட் திருநங்கை ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருகிறார்கள். ராபர்ட் அண்ணா நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். 2 கொலை உட்பட 16 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குண்டரில் சிறைக்கு சென்று வந்தபின்னர், நேரடியாக களத்தில் இறங்காமல் அமைதியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
6 பேர் கும்பல் செயல்
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தனது வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்றுகொண்டு இருந்த ராபர்ட்டை பின்தொடர்ந்த 6 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராபர்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை: 5 ஆண்டு பகைக்கு பழிதீர்த்து இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ்.. ரௌடியை கொலை செய்து பயங்கரம்.!
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், ராபர்டின் கூட்டாளி கோகுல் என்ற நபரை, முன்விரோதம் காரணமாக ரௌடி லோகு என்பவர் கொலை செய்தார். இந்த விஷயத்தில் லோகு, ராபர்ட் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்டு அரங்கேற்றம்
ராபர்ட்டை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த லோகு, சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் கூட்டாளிகள் உதவியுடன் திட்டமிட்டு ராபர்ட்டை தீர்த்துக்கட்டினார். கொலை செய்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலையாளிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின்னர் தனிப்படை காவல்துறையினர் லோகு, சங்கர், தீபக், சிலம்பரசன், வெங்கட் மோகன்லால் ஆகியோரை கைது செய்தனர். ராபர்ட் - லோகு இடையே இருந்த 5 ஆண்டு முன்பகைக்கு, ராபர்ட் முந்துவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என லோகு கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வீரியம் தெரியாத விஜய்க்கு பதில் சொல்லனுமா? - அமைச்சர் சிவசங்கர் காட்டம்.!