மக்களே கவனம்.. காய்ச்சலுக்கு மெடிக்களில் ஊசி செலுத்திய 18 வயது மாணவர் பலி; சென்னையில் சோகம்.!
மக்களே கவனம்.. காய்ச்சலுக்கு மெடிக்களில் ஊசி செலுத்திய 18 வயது மாணவர் பலி; சென்னையில் சோகம்.!
காய்ச்சலுக்கு மருந்தகத்தில் ஊசி செலுத்திக்கொண்டு 18 வயது பள்ளி மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள தாம்பரம், சேலையூர் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 18). சிறுவன் சந்தோஷ், அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட சந்தோஷ், அங்கிருந்த மருந்தகத்தில் ஊசி செலுத்தியதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: "ராஜா வெளில வந்திடு" - அன்பாக அழைத்தும் வராத கேடி., கதவை உடைத்து உள்ளே சென்ற போலிஸ்.!
ஊசி செலுத்திய இடத்தில் வலி
அப்போது, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் அதிக வலி ஏற்பட, அதுசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை
இதனிடையே, சிகிச்சையில் இருந்த மருத்துவர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார். சிறுவனின் மரணத்திற்கு மருந்தகத்தில் ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என சிறுவனின் பெற்றோர் & உறவினர் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்கு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து, மருத்துவரின் பேரில் மாத்திரை / ஊசி செலுத்திக்கொள்வது நல்லது.
இதையும் படிங்க: நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் வால்கிங்.. 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆம்னி வேன் மோதி மரணம்.!