நான் என்ன தீவிரவாதியா? டென்சனில் தமிழிசை., சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பாஜக தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு.!
நான் என்ன தீவிரவாதியா? டென்சனில் தமிழிசை., சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பாஜக தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு.!

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்ளை மற்றும் மும்மொழிக்கொள்கை விஷயத்தில், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. புதிய கல்விக்கொள்கையால் வரும் நிதி கிடைக்கவில்லை என்றாலும், மும்மொழிக்கொள்கையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஆதரவும்-எதிர்ப்பும்
இதனிடையே, மும்மொழி மற்றும் புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு தனது தரப்பு விளக்கத்தையும் அளித்த நிலையில், தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் போன்றவையும் நடத்தப்படுகிறது. இன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தமிழிசை சவுந்தர்ராஜன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். அதற்கு உரிய அனுமதி பெறவில்லை என காவல்துறையினர் குற்றம்சாட்டி, பாஜகவினர் கையெழுத்து இயக்கம் மேற்கொள்ள அனுமதி மறுத்தனர்.
இதனால் இரண்டு மணிநேரத்தை கடந்தும் காவல்துறையினர் - தமிழிசை மற்றும் பாஜக தொண்டர்கள் வாக்குவாதம் நடந்து வருகிறது. தமிழிசை கைதாகி காவல்துறை வாகனத்திற்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதால் அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: ஆனந்த விகடன் இணையதள முடக்கம் விஷயத்தில் பச்சைக்கொடி காண்பித்த நீதிமன்றம்.. மத்திய அரசுக்கு உத்தரவு.!
தமிழிசை ஆவேச பேட்டி
இதனிடையே நிகழ்விடத்தில் தமிழிசை செய்தியளர்களை சந்தித்தபோது, "நான் அமைதியாக மக்களை சந்திக்க வந்தபோது, அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கிறார்கள். பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மக்களை சந்திக்க கூடாது என அனுமதி மறுக்கிறார்கள். இது ஆர்ப்பாட்டம், பேரணி இல்லை. சாமானிய மக்களுக்கு சமமான கல்வி வேண்டும் என இரண்டரை மணிநேரம் நான் நிற்கிறேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் நாங்கள் இனி செல்வோம். எவ்வுளவு நபர்களை உங்களால் கைது செய்ய முடியும்?.
சாலை மறியல்
அமைதியான முறையில் பொதுமக்களை சந்திப்பதை மறுக்கிறார்கள், தடுக்கிறார்கள். நான் என்ன தீவிரவாதியா? என்னை சுற்றிவளைத்து காவல்துறையினர் வைத்துள்ளனர். நாங்கள் அராஜகம் செய்யவில்லை. காவல்துறையினர் அராஜகம் செய்கின்றனர்." என பேசினார். தமிழிசையை காவல்துறையினர் சுற்றி வளைத்த ஆத்திரத்தில், எம்.ஜி.ஆர் நகர் பிரதான வீதி பகுதியில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர், அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்கள பணியாளர்ளை பிற வேலைகளுக்கு ஈடுபடுத்தி கமிஷன் கேட்டு மிரட்டல்? குமுறல்.!