×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுடுதண்ணீரில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுமி; சென்னையில் சோகம்.!

சுடுதண்ணீரில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுமி; சென்னையில் சோகம்.!

Advertisement

சென்னையில் உள்ள திருவெற்றியூர், திருவேதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 3 வயதுடைய மகள் ஓவியா ஆகியோர் இருக்கின்றனர். 

இதனிடையே, கடந்த 9 நாட்களுக்கு முன்னதாக சிறுமியை குளிக்க வைக்க பாத்திரத்தில் சுடுதண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. அப்போது, சூடான நீரில் சிறுமி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். 

சிறுமி உயிருக்கு ஊசல்

சிறுமியை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், கடந்த 9 நாட்களாக சிறுமி படுகாயத்துடன் உயிருக்கு போராடி வந்தார். 

இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கு வாங்க மூதாட்டி காது அறுத்து கொலை; மதுரையில் பகீர்.!

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: துக்க வீட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு நடந்த சோகம்; 3 பேர் பரிதாப பலி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death #3 Year Old Baby Dies #Thiruvotriyur #chennai #திருவெற்றியூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story