பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறை? சென்னையில் தாய் கண்ணீர் குமுறல்..!
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறை? சென்னையில் தாய் கண்ணீர் குமுறல்..!
அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாலியல் வழக்கில் குற்றவாளி தப்புவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு, அப்பகுதியில் வசித்து வரும் பந்தல் ரவி என்பவரின் மகன் பிரசாந்த் (வயது 27) பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையம், காவல் ஆணையர் அலுவலகம் என பல இடங்களில் சிறுமியின் தாய் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: உணவு டெலிவரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை., எஸ்.ஐ-க்கு ஆபாச அர்ச்சனை.. இளைஞர்கள் அடாவடி.!
பிரசாத்துக்கு ஆதரவாக காவல்துறை?
இதனால் சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் போராடி எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வைத்தும், வழக்கு விசாரணை நடைபெறுவதில்லை. பாதிக்கப்பட்ட தரப்பு புகார் அளிக்க காவல் நிலையம் சென்றாலும், பிரசாத்துக்கு ஆதரவாக காவலர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், காவல் அதிகாரிகளுக்கு பிரசாந்த் தரப்பில் இருந்து அரசியல் செல்வாக்கு உடையோர் தொடர்பு கொண்டு பேசியதும், அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே அண்ணா பகலைக்கழக விவகாரம் போல, தனது மகளும், பல சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களை கொலை செய்திடுவதாகவும் பிரசாந்த் மிரட்டுகிறார். இதனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெண் கண்ணீருடன் முன்வைக்கும் தகவல்
வீடியோ நன்றிநியூஸ் தமிழ் 24X7
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்.. நீரில் மூழ்கி 2 சிறார்கள் பலி.!