சென்னை: விஜிபி தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பணியாளருக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!
சென்னை: விஜிபி தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பணியாளர் போக்ஸோவில் கைது..!
2 சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் தீம் பார்க் ஊழியர், போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விஜிபி தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. இங்கு வார இறுதி விடுமுறை நாட்களில், குடும்பத்தினருடன் பலரும் வந்து பொழுதை கழித்துச் செல்வார்கள்.
இதையும் படிங்க: மாஞ்சா நூலால் உயிருக்கு போராடும் பெண் காவலர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
இதனிடையே, கடந்த ஜனவரி 17 அன்று, பெண் ஒருவர் தனது 16 வயது, 19 வயது மகள்களுடன் வருகை தந்துள்ளார். அப்போது, அவர்கள் வாட்டர் ஸ்லைடிங் விளையாட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
பாலியல் தொல்லை
அப்போது, கீழே வழுக்கியபடி வந்த சிறுமி மற்றும் அவரின் சகோதரிக்கு, விடுதி ஊழியர் சுரேந்தர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமிகள் தாயிடம் தெரிவித்தபோது, அவர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
நிர்வாகத்தின் தரப்பில் உரிய பதில் கிடைக்காத காரணத்தால், பெண்மணி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர்.
மேலும், விஜிபி நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சரக்கடிக்க கொட்டகை போட்ட விசிக பிரமுகர்; எதிர்ப்பு தெரிவித்தவர் மீது பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.. 6 பேர் கும்பல் கைது.!