கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி; பள்ளி வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி; பள்ளி வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா பகுதியில் உள்ள பள்ளியில், 17 வயதுடைய சிறுமி குழந்தையை பெற்றெடுத்து வீதியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11ம் வகுப்பு பயின்று வந்த அந்த சிறுமி, சம்பவத்தன்று கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பிரசவம் நடந்து, குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின் அதனை கழிவறையின் ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.
இதையும் படிங்க: "எந்த குற்றவாளியையும் தப்பிக்க விடமாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி.!
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போடி கிராமத்தில் செயல்பட்டு வரும் கஸ்தூர்பா காந்தி ரெசிடென்ஷியல் பள்ளிக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டனர். மேலும், அங்கு விடுதியுடன் செயல்பட்டு வந்த பள்ளி வளாகத்தில் ஆய்வு நடத்தப்பட்டு சிறுமிக்கு நடந்த விஷயம் உறுதி செய்யப்பட்டது.
தாளாளர் பணியிடைநீக்கம்
சிறுமி பிரசவத்திற்கு முதல் நாள் உணவு சாப்பிட்டு பின் வாந்தியும் எடுத்ததாக அவருடன் இருந்த தோழிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தான் சிறுமி கழிவறையில் குழந்தையை பெற்றுஎடுத்துள்ளார். சிறுமி கர்ப்பமாக இருந்ததை கவனிக்க தவறி, உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக பள்ளியின் தாளாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கழிவறையில் இருந்து வீசப்பட்டதில் குழந்தையின் நுரையீரலில் காயம் ஏற்பட்ட நிலையில், அபாயகட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பெறுவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்த நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் இடத்திற்கு ஆசைப்படும் புஸ்ஸி ஆனந்த்? லீக்கான ஆடியோ.. தவெக-வுக்குள் கோஷ்டி?