ரூ.300 இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு, 16 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் தீர்ப்பளித்த நீதிமன்றம்; சிறைவாசம்.!
ரூ.300 இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு, 16 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் தீர்ப்பளித்த நீதிமன்றம்; சிறைவாசம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் துரைராஜ் (வயது 50).
துரைராஜிடம், மணியக்காரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தனபாக்கியம் என்பவர், மின்னிணைப்பை மாற்றி வழங்கிடவும், புதிய கேரியர் பொருத்தவும் முறையிட்டு இருந்தார். இப்பணிகளை செய்ய ரூ.300 பணம் வேண்டும் என உதவி பொறியாளர் துரைராஜ் அழுத்தம் கொடுத்து இருக்கிறார்.
இதனால் விஷயம் குறித்து தனபாக்கியம் இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் ரசாயன பவுடர் தடவிய பணத்தை வழங்கி இருந்தனர். அதனை அதிகாரிகளின் ஆலோசனைப்படி தனபாக்கியம் துரைராஜிடம் கொடுக்க, இலஞ்ச ஒழிப்புத்துறையினர் மறைந்திருந்து துரைராஜை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கோவை: கஞ்சா விற்பனையில் 22 வயது இளைஞர்கள்; தவறி விழுந்ததில் கை-கால் முறிவு.!
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 21, 2009 அன்று நடைபெற்றது. இவ்வழக்கு தொடர்பான புகாரை விசாரணை செய்த கோவை சிர்பூ நீதிமன்றம், துரைராஜுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. இன்று நீ விதைப்பதே, நாளை உனக்கு பரிசாக கிடைக்கும்.
இதையும் படிங்க: கோவை: கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையை வளர்க்க தயக்கம்; தாய் எடுத்த முடிவு.!