கஞ்சா வழக்கில் கைதான மகன்.. தீக்குளித்து உயிரைவிட்ட தந்தை.. கோவையில் நேர்ந்த சோகம்.!
கஞ்சா வழக்கில் கைதான மகன்.. தீக்குளித்து உயிரைவிட்ட தந்தை.. கோவையில் நேர்ந்த சோகம்.!

கஞ்சா வழக்கில் மகனை காவல்துறையினர் பொய்யாக கைது செய்துள்ளனர் என தந்தை தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், சிவா நகரில் வசித்து வருபவர் மணி பாரதி (வயது 19). இவரின் மீது திருட்டு, அடிதடி, கஞ்சா விற்பனை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைதான மகன்; காவல் நிலையம் முன் தீக்குளித்த தந்தை.. கோவையில் பரபரப்பு.!
மணியின் தந்தை சேகர் (வயது 45), கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் ஆவார். தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இதனிடையே, கடந்த ஜன.31 அன்று அன்னை இந்திரா நகர் பகுதியில், பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்வது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
தீக்குளித்து தற்கொலை
இதன்பேரில் மணிபாரதி, அவரின் நண்பர் ஜானகிராமன் (வயது 27) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 108 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தனது மகனின் கைதை அறிந்துகொண்ட சேகர், மகனின் மீது பொய்யான வழக்கு பதிவு செய்ததாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் மருத்துவமனையில் அனுமதி செய்த சேகர், நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்கட்சி பிரமுகர்.. புகாரை வாபஸ் பெற மிரட்டும் வடவள்ளி இன்ஸ்பெக்டர்.. பெண் குமுறல்.!