விசாரணைக்கு தொடர்புகொண்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஜேசிபி உரிமையாளர் கைது..!
விசாரணைக்கு தொடர்புகொண்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஜேசிபி உரிமையாளர் கைது..!
விசாரணைக்கு தொடர்புகொண்ட காவலருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் ஜேசிபி உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகுமாரின் ஜேசிபி வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: Trending Video: கடலில் இருந்து நீரை உறிஞ்சும் பெஞ்சல் புயல்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ.!
பாலியல் தொல்லை
இந்த விசாரணைக்காக பெண் காவலர் விஜயகுமாரை செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, விஜயகுமார் பெண் காவலரின் செல்போன் நம்பரை சேமித்து வைத்துக்கொண்டுள்ளனர். விசாரணை நிறைவுபெற்ற பின்னர், சில வாரங்கள் கழித்து, பெண் காவலருக்கு விஜயகுமார் மீண்டும் தொடர்புகொண்டுள்ளார்.
குற்றவாளி கைது
மேலும், பெண் காவலருக்கு ஆபாசமாக பேசி, குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளர். முதலில் காவலர் எச்சரித்து பார்த்தும் பலனில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!