போதையில் வம்பு வழக்கு வந்ததும் பம்மு.. போலீசிடம் வம்பிழுத்த 2 பெண்கள் கைது.!
போதையில் வம்பு வழக்கு வந்ததும் பம்மு.. போலீசிடம் வம்பிழுத்த 2 பெண்கள் கைது.!
கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன? போதையில் துள்ளல், காலையில் அமைதியோ அமைதி என்ற பாணியில், சீரியல் நாகினி நாகம் போல சீறிப்பாய்ந்த பெண்கள், போதை தெளிந்து கைதாகி அமைதியாக சென்ற சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.
தர்மபுரி பேருந்து நிறுத்தத்தில், நள்ளிரவு நேரத்தில் 2 இளம்பெண்கள் பொதுமக்களிடம் வம்பிழுத்து தகராறு செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக பாலியல் தொல்லை; பூசாரி போக்ஸோயில் கைது.!
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெண்களிடம் விசாரித்தபோது போதையில் இருந்த பெண்கள், காவலர்களை அவதூறாக வசைபாடினர்.
போதையில் ஏன் இந்த விபரீத சேட்டை? பேருந்தில் ஏறி ஊருக்கு செல்லுங்கள் என அறிவுறுத்திய பொதுமக்களுக்கும் ஆபாச அர்ச்சனை செய்யப்பட்டது.
இதனால் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையில், இவர்கள் சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா, கண்மணி என்பது தெரியவந்தது.
அழகு நிலைய கலைஞர்களாக வேலை பார்த்து வரும் இருவரும், வாடிக்கையாளர்கள் அழைக்கும் இடத்திற்கு சென்று பணியை செய்பவர்கள் ஆவார்கள்.
அவ்வாறாக கோவை, திருப்பூர் நகருக்கு சென்றுவிட்டு பின் மீண்டும் வேலைக்காக தருமபுரி வந்தபோது, போதையை ஏற்றிக்கொண்டு அட்ராசிட்டி செய்தது தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மாணவிகள் சாப்பிடும் உணவில் பல்லி கலந்து நேர்ந்த சோகம்; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.!