ஈரோடு: வேகத்தடையில் இளைஞருக்கு காத்திருந்த எமன்; வேலைக்கு சென்று வரும்போது சோகம்.!
ஈரோடு: வேகத்தடையில் இளைஞருக்கு காத்திருந்த எமன்; வேலைக்கு சென்று வரும்போது சோகம்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, ஆர்.என் புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அப்புசாமி. இவரின் மனைவி செந்தாமரை. தம்பதிகளுக்கு 28 வயதுடைய சக்தி ஆனந்த் என்ற மகன் இருக்கிறார். இவர் ஏசி மெக்கானிக்காக ஈரோட்டில் பணியாற்றி வந்துள்ளார்.
பரிதாப மரணம்
நேற்று இரவு நேரத்தில் பணிகளை முடித்துக்கொண்ட ஆனந்த், காவேரி ஆற்றுப்பாலம் வழியாக வந்துள்ளார். அப்போது, சாலையில் வேகத்தடை ஒன்று இருந்துள்ளது. சரிவர தெரியாமல் இருந்த வேகத்தடையின் மீது வாகனத்தை ஏற்றியபோது, சாலையில் நிலைதடுமாறி விழுந்த ஆனந்த், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தாயைப்பற்றி போதையில் ஆபாச வசைப்பாடல்.. கார் ஓட்டுனரை திரைப்பட பாணியில் கொன்ற முதலாளி.. பதறவைக்கும் சம்பவம்.!
காவல்துறை விசாரணை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மகன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு முன்வைத்துள்ளனர். அவசர ஊர்திக்கு தொடர்புகொண்ட போது, அரைமணிநேரம் தாமதமாக ஊர்தி வந்ததாகவும், இதனால் சக்தி உயிரிழந்ததாகவும் ஆதங்க குரலை உறவினர்கள் வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கொடுமை.!