எச்சரிக்கை பாடம் இது.. 3ம் வகுப்பு சிறுமி மாரடைப்பால் மரணம்.. சுருண்டு விழுந்து சோகம்.!
எச்சரிக்கை பாடம் இது.. 3ம் வகுப்பு சிறுமி மாரடைப்பால் மரணம்.. சுருண்டு விழுந்து சோகம்.!
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், தல்டேஜ் பகுதியில் ஜாபர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8 வயதுடைய சிறுமி மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுமி, வகுப்பறைக்கு செல்லும் வழியில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேரில் அமர்ந்து இருக்கிறார்.
மாரடைப்பு மரணம்:
பின் ஒருசில நொடிகளில் அவர் மயங்கி விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், விரைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி மரணம் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 16 வயது சிறுவனைச் தேடித் சென்ற 10 வயது சிறுமி.. இன்ஸ்ட்டா காதலால் விபரீதம்.!
எச்சரிக்கை பாடம்
இந்நிலையில், சிறுமியின் மரணத்தை மேற்கோளிட்டு, எக்ஸ் வலைதள பயனர் ஒருவர், "குஜராத்தில் 3ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உணவு பழக்க முறைகள் மாற்றம் இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் கூட, இது அனைவருக்குமான எச்சரிக்கை என்றே நான் பார்க்கிறேன்" என கூறி இருக்கிறார். அவரின் கருத்துக்கள் கவனத்தை பெற்றுள்ளது.
சிறுமியின் இறுதி நொடிகள் பதிவான காட்சிகள்
இதையும் படிங்க: ஷூ லேஷில் கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை; கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!