#Breaking: தாய்-தந்தை, மகன் என 3 பேர் மர்ம மரணம்; மீட்கப்பட்ட சடலம்.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.!
#Breaking: தாய்-தந்தை, மகன் என 3 பேர் மர்ம மரணம்; மீட்கப்பட்ட சடலம்.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், குளம் ஒன்றில் தாய் மற்றும் மகனின் சடலம் மிதந்த நிலையில், தந்தை ஒருவரின் உடல் மரத்தில் தூக்கில் இருந்தது.
இதையும் படிங்க: விஏஓ-க்கே இந்த நிலைமையா? பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவியாளரின் அதிர்ச்சி செயல்.. சாணியடி.!
காவல்துறை விசாரணை
தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யார்? தற்கொலை செய்துகொண்டனரா? கொலை செய்யப்பட்டனரா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் பாய்சன்.. தாயின் செயலா இது? மாணவி உயிர் ஊசல்..! தமிழகமே ஷாக்.!