போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் ஆவேசம்; மனைவிக்கு கழுத்தில் வெட்டு.!
போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் ஆவேசம்; மனைவிக்கு கழுத்தில் வெட்டு.!

குடும்ப தகராறு காரணமாக மனைவி வெட்டப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, பு. கொணலவாடி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன் (வயது 36).
இவரின் மனைவி கற்பகவல்லி (வயது 32). தம்பதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சியில் கணவரை இழந்த கைம்பெண் பலாத்காரம், கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!
குடிபோதைக்கு அடிமையான கோவிந்தன், அவ்போது மதுபானம் அருந்திவிட்டு தாமதமாக வீட்டிற்கு வருவதையும், போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கத்தியால் கழுத்து வெட்டு
இந்நிலையில், நேற்று முன்தினமும் போதையில் விடியற்காலை 04:30 மணிக்கு கோவிந்தன் வீட்டிற்கு வரவே, அவரை மனைவி கண்டித்து இருக்கிறார். இதனால் தம்பதிகளுக்குள் தகராறு உண்டாகி இருக்கிறது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த கோவிந்தன், மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டி இருக்கிறார். அக்கம் பக்கத்தினரால் பெண்மணி தற்போது உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர், கோவிந்தனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: கைம்பெண் பலாத்காரம் & கொலை விவகாரம்; 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை.!