"உங்க கூட பேசணும்" - இளைஞரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்; குமரியில் பகீர் சம்பவம்.!
உங்க கூட பேசணும் - இளைஞரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்; குமரியில் பகீர் சம்பவம்.!

கன்னியாகுமரி மாவட்ட இந்து கட்சி நிர்வாகி, மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் நாகர்கோவில் பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறேன். என்னுடன் களியங்காடு பகுதியில் வந்த ஈசான சிவம் என்ற ராஜ் (வயது 34), நட்பாக பழகி வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் நட்பில் இருந்த நிலையில், சிவம் கோவில்களில் கும்பாவிஷேகம், பூஜை பணிகளை செய்து வருகிறார்.
உங்க கூட பேசணும்
இதனிடையே, சம்பவத்தன்று என்னிடம் கும்பாவிசேக பணிகளுக்காக விற்பனை செய்யப்படும் பொருட்கள் கடை தொடங்க இருக்கிறேன். இதனால் ரூ.10 இலட்சம் வேண்டும் என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் சிவத்தின் நண்பர் என தாழக்குடி கிராமத்தை சேர்ந்த கோபலப்பன் (வயது 53) என்பவர் எனக்கு தொடர்புகொண்டு, சிவம் உங்களிடம் பேச வேண்டும் என அழைத்தார்.
இதையும் படிங்க: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 13 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. ஸ்மார்ட்போன் கொடுக்கும் பெற்றோரே கவனம்.!
உல்லாச வீடியோ
நான் அவர் கூறிய இடத்திற்கு சென்றபோது, சிவம் இல்லை. கோபாலப்பன் தனியே இருக்க, சிவம் வருவதாக கூறினார். சிறிது காத்திருந்தபோது, கோபலப்பன் மதுபானம் ஊற்றிக்கொடுத்தார். நான் அளவுக்கு அதிகம் குடித்து போதை தலைக்கேறி நடப்பது தெரியவில்லை. பின் வந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து சிவம், கோபலப்பன் இருவரும் எனது கடைக்கு வந்து, நீ கோட்டாரில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தாய். போதையில் நீங்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளேன்.
சாமியார் கைது
ரூ.10 இலட்சம் வரவில்லை என்றால் வீடியோ ரிலீசாகும் என மிரட்டினார். அதன்பின்னரே எனக்கு சம்பவத்தன்று என்னை போதைக்கு உள்ளாக்கி, பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டுவது தெரியவந்தது. இந்த விடியோவை வாட்ஸப்பிலும் அனுப்பி இருக்கிறார். அவரின் மீது நடவடிக்கை வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிவத்தை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர் தேடப்படுகிறார்.
இதையும் படிங்க: தமிழகமே ஷாக்.. பரிகாரம் செய்தும் பலிக்கவில்லை: ஜோதிடர் கூலிப்படை ஏவி கொலை - பெண் வெறிச்செயல்..!