குட்டை நீரில் மூழ்கி தத்தளித்த மாணவன்; காப்பாற்றச்சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலி;!
குட்டை நீரில் மூழ்கி தத்தளித்த மாணவன்; காப்பாற்றச்சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலி;!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர், எழுவப்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். ஓசூரில் உள்ள கோஸ்தானபள்ளி பகுதியில் வசித்து வருபவர் கௌரிசங்கர் ராஜு (வயது 53). இவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
எழுவப்பள்ளி பகுதியில் வசித்து varupavar மணிகண்டன். இவரின் மகன் நித்தின் (வயது 8). இவர் இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று உணவு இடைவேளையின்போது, நிதின் அங்குள்ள வெங்கடேஷ் என்பவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.அங்கு பிரம்மாண்டமான பள்ளம் தோன்றி, விவசாயத்துக்காக நீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: ஆண்டவா என்ன கொடுமை இது? 14 வயது சிறுமிக்கு தாலிகட்டி, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற கொடுமை.. தாய் உட்பட 3 பேர் கைது.!
இருவரும் பலியான சோகம்
அப்போது, கரையின் மீது ஏறிய சிறுவன் தடுமாறி நீரில் விழுந்தார். இதனை பள்ளியில் பயின்று வரும் நிதினின் தம்பி ஆசிரியரிடம் தெரிவிக்க, அவர் உணவை அப்படியே வைத்துவிட்டு சிறுவனை காப்பாற்றச் சென்றார். சிறுவன் நீரில் தத்தளிக்க, அவரை காப்பாற்ற முயன்ற ஆசிரியரும் நீரின் பிடியில் சிக்கினார்.
இருவரும் நீரில் மூழ்கிய நிலையில், தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர் கௌரி சங்கர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். இவரின் மனைவி ஸ்ரீஷா, சென்னசமுத்திரம் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலனுடன் திருமணம், இன்ஸ்டண்ட் தேனிலவு.. கம்பி நீட்ட முயன்றவரிடம் கறார் காட்டிய பெண் வீட்டார், காவல்துறையினர்.!