மதுரை: 18 வயதில் வழிப்பறி கொலை., 20 வயதில் வழக்கு விரக்தியால் தற்கொலை.. இளைஞரின் விபரீத முடிவு.!
மதுரை: 18 வயதில் வழிப்பறி கொலை., 20 வயதில் வழக்கு விரக்தியால் தற்கொலை.. இளைஞரின் விபரீத முடிவு.!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி, தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில், கடந்த 2023 ல் கொலை ஒன்று நடந்தது. கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சபேஷ் குமார் (வயது 18), சன்னி (வயது 21) ஆகியோர், நவம்பர் 29ல் தங்களின் வீட்டுக்கு சமையல் பொருட்களை வாங்கி வந்தனர்.
கொலை வழக்கில் கைது
அப்போது, இருவர் கும்பல் இவர்களை வழிமறித்து சுபேஷை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் மறவன்குளம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 20) என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் வெளியே வந்த சந்தோஷ் குமார், திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதையும் படிங்க: 15 பவுன் நகை ஆட்டோவில் தவற விட்ட நபர்.. தேடிச்சென்று கொடுத்த ஆட்டோ டிரைவர்.!
தற்கொலை
வேலைக்கு சென்ற இடத்தில சந்தோஷின் கொலை வழக்கு விஷயம் தெரியவரவே, அங்கு அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் சொந்த ஊர் வந்தவர் சில நாட்கள் இருக்க, அவருக்கு கொலை வழக்கு விஷயத்தில் சம்மன் வந்தது. இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் குமார் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க: முதிய தம்பதியின் முடிவால் சோகம்.. கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவர் பலி., மனைவி உயிர் ஊசல்.!