×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுரை: என் வண்டிக்கு ப்ரீ சர்வீஸ் கிடையாதா? - மெக்கானிக் கடையில் பளார் விட்ட காவலர்.. வீடியோவுடன் புகார்.!

மதுரை: என் வண்டிக்கு ப்ரீ வேலை கிடையாதா? - மெக்கானிக் கடையில் பளார் விட்ட காவலர்.. வீடியோவுடன் புகார்.!

Advertisement

ரூ.18 ஆயிரம் வரை பாக்கி வைத்து இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி காவலர் ஊழியரை தாக்கிய காட்சி நடந்துள்ளது.

 

மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு அவ்வப்போது வரும் பாலமேடு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை, தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்கம் செய்து கொடுக்குமாறு கண்டித்து வந்துள்ளார்.

வாகனத்தை பழுதுநீக்க கொடுத்தார்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், மதுரை வாடிப்பட்டி பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்ரீனிவாசனின் கடையில் அறிமுகத்தை ஏற்படுத்திய அண்ணாதுரை, தனது புல்லட் ரக இருசக்கர வாகனத்தை பழுதுநீக்க கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: தறிகெட்ட வேகத்தால் சறுக்கல்.. கல்லூரி மாணவர் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி., பதறவைக்கும் காட்சிகள்.!

ஆட்சியர் அலுவலகத்தில் புகார் 

அதற்கான தொகை எதையும் கொடுக்காத அண்ணாதுரை, தொடர்ந்து தனது மிரட்டல் பேச்சு, பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்கிறேன் என கட்டாயப்படுத்தி பழுதுநீக்கம் செய்ய வைத்துள்ளார். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

பளார்விட்ட சம்பவம்

மேலும், தற்போது வரை ரூ.8000 வரை பாக்கி வைத்துள்ள அண்ணாதுரை, சமீபத்தில் ரூ.10 ஆயிரம் அளவுக்கு வேலை வைத்துள்ளார். இதனால் பணத்தை கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என ஸ்ரீனிவாசன் கூறியதால், ஜனவரி 04 அன்று காவல் அதிகாரி அண்ணாதுரை, ஸ்ரீனிவாசன் மற்றும் அவரின் பணியாளர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

வீடியோ வைரல்

இதுகுறித்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்படவே, காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் சிக்கிக்கொண்ட காரணத்தால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ நன்றிதமிழ் ஜனம்

 

இதையும் படிங்க: கள்ளக்காதலனை கழுத்தறுத்து கொன்று தலைமறைவான கள்ளக்காதலி; ஆசையாக சென்றவருக்கு அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #மதுரை #மெக்கானிக் கடை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story