தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தஞ்சாவூர்: காதல் திருமணம் முடிந்த 10 நாட்களில், செயின் திருட்டு வழக்கில் கைதான இளைஞர்; ஆன்லைன் கடனை அடைக்க விபரீத செயல்.!

தஞ்சாவூர்: காதல் திருமணம் முடிந்த 10 நாட்களில், செயின் திருட்டு வழக்கில் கைதான இளைஞர்; ஆன்லைன் கடனை அடைக்க விபரீத செயல்.!

in Mayiladuthurai Chain Snatching Case Youth Arrested by Cops  Advertisement

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம், பேச்சவாடி, மேகனாப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவரின் மனைவி மலர்க்கொடி (வயது 67). சம்பவத்தன்று காலை நேரத்தில், இவர் வீட்டின் அருகேயுள்ள பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அச்சமயம், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், மலர்கொடியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மலர்க்கொடி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பிச்சென்றார். 

குற்றவாளியின் அடையாளம்

இந்த விஷயம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். விசாரணையைத் தொடர்ந்து தங்க சங்கிலியை பறித்ததாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை, திருமஞ்சன வீதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணனின் மகன் விஜயபாலன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டார். 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆணுறுப்பை நசுக்கி சித்ரவதை; நா.த.க பிரமுகர் உட்பட 6 பேர் அதிர்ச்சி செயல்.!

காதல் திருமணம் முடிந்த 10 நாட்களில் சோகம்

திருட்டு சம்பவத்திற்கு பின்னர் விஜயபாலன் தலைமறைவாக இருப்பது தெரியவரவே, அதிகாரிகள் தனிப்படை அமைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே அவருக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. காதல் திருமணம் செய்த இளைஞர், ஆன்லைன் மூலமாக ரூ.6 இலட்சம் கடன் வாங்கியதாக தெரியவருகிறது. அதனை விரைந்து அடைக்க நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது. Love

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்; 21 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.. காதல் பெயரில் கட்டாயப்படுத்தி அத்துமீறல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Love #Chain Snatching #Mayiladuthurai #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story