நள்ளிரவில் அதிக சுமையுடன் வந்த லாரி.! சோதனையில் போலீசார் கண்ட காட்சி..!
In midnight heavy weight larry sieze
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதனை அடுத்து அங்கங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
அதில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர மற்ற தேவையில்லாமல் சாலையில் வரும் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பியும், பறிமுதல் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இரவு நேரத்தில் அதிக சுமையுடன் லாரி ஒன்று வருவதை பார்த்த போலீசார் அந்த லாரியை சோதனை செய்துள்ளனர். அதில் 10 லட்சம் மதிப்பிலான பீடி பண்டல்கள் இருந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதில் அந்த லாரி அனுமதியின்றி திருப்பூர் செல்லவிருந்தது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.