நாமக்கல்: குடிக்க பணம் கொடு.. மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல்.. இளைஞர் அதிர்ச்சி செயல்.!
நாமக்கல்: குடிக்க பணம் கொடு.. மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல்.. இளைஞர் அதிர்ச்சி செயல்.!
இன்றுள்ள இளம் தலைமுறை மது, கஞ்சா, சிகிரெட், ஹெராயின், மாத்திரை என பல்வேறு போதை பொருட்களை உட்கொண்டு, தனது எதிர்காலத்தை சீரழித்து வருகிறது.
போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு பைக்கில் அதிவேகமாக செல்வது, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது என எண்ணிலடங்காத குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: நாமக்கல்: கேடி மாமியாரும், கேப்பில் கிடா வெட்டிய மருமகளும்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கப்பட்ட மாமியார்.. திடுக் பின்னணி.!
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில், போதை இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்தினார்.
ஏற்கனவே போதையில் இருக்கும் இளைஞர், கூடுதல் போதைக்கு அங்கு யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் மாற்றுத்திறனாளி ஒருவரை கண்டு, அவரிடம் பணம்பறிக்க முயற்சித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை கடுமையாக தாக்கிய இளைஞர், கட்டைகள் கொண்டும் அவரை அடித்தார். இதனை நேரில் கண்ட பொதுமக்களில் சிலர் இளைஞரை விலக்கிவிட, அவர் ஆவேசமாக பாய்ந்ததால் அவரை நிறுத்தி பளார் விடப்பட்டது.
பின் இங்கேயே இருடா ஆளை கூட்டிட்டு வரேன். என் தெருவுக்கு வா என போதை இளைஞர் செல்போனில் பேசியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
புதுப்பேட்டை படத்தில் நடிகர் தனுஷ் தொண்டையில் ஆபரேஷன் காசு கொடு என்பதை பாவமான காட்சியாக காட்டி இருப்பார்கள். ஆனால், இங்கோ போதை அலம்பலில் இளைஞர் நடந்துகொண்ட விதம் பலரையும் எரிச்சலூட்டி இருக்கிறது.
வீடியோ நன்றிபாலிமர் டிவி
இதையும் படிங்க: தமிழகமே சோகம்.. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தாய், 2 குழந்தைகள் மரணம்..!