44 பயணிகள் உயிர் தப்பியது.. ஓட்டுனருக்கு திடீர் தலைசுற்றல்.. மசினகுடி மலையில் பீதியான பயணிகள்.!
44 பயணிகள் உயிர் தப்பியது.. ஓட்டுனருக்கு திடீர் தலைசுற்றல்.. மசினகுடி மலையில் பீதியான பயணிகள்.!

அரசுப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 44 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், மசினகுடி, மாயாறு பகுதியில் இருந்து, 44 பயணிகளை ஏற்றுக்கொண்ட அரசுப்பேருந்து ஒன்று, நேற்று காலை சுமார் 07:30 மணியளவில் ஊட்டி நோக்கி பயணம் செய்தது. பேருந்தை அசோக் குமார் என்பவர் ஓட்டினார்.
இதையும் படிங்க: சித்தப்பா, 85 தாத்தா, 25 வயது இளைஞன் என சிறுமியை திட்டமிட்டு வேட்டையாடிய கொடுமை.. ஊட்டியில் அதிர்ச்சி.!
புதரில் மோதி நின்றது
இந்த பேருந்து மசினகுடி, மாவனல்லா பகுதியில் வந்துள்ளது. அப்போது, பேருந்து ஓட்டுனருக்கு திடீரென மயக்கம் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த புதரில் மோதி நின்றது.
பேருந்து ஓட்டுநர் நொடியில் சுதாரித்து பேருந்தை கட்டுப்படுத்தி புதர் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் சிறு காயத்துடன் தப்பித்துக்கொண்டனர். லேசான காயம் அடைந்தோர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். ஓட்டுனரும் மருத்துவ சிகிச்சை பெற்றார். பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்ட காரணத்தால், பேருந்தின் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையும் படிங்க: 12 வயது சிறுமி பலாத்காரம்.. அமைதி காத்த தாய்.. சிறுமியின் புகாரால் 3ம் கணவருடன் ஓட்டம்.!