கொய்யாப்பழம் பறிக்கச் சென்று நடந்த சோகம்; 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி.!
கொய்யாப்பழம் பறிக்கச் சென்று நடந்த சோகம்; 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி.!
கிணற்றுக்கு அருகே இருக்கும் மரத்தில் காய் பறிக்கச் சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எழுமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரின் மகன் மோகித் (வயது 8). சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
இதையும் படிங்க: அக்காவை வழியனுப்ப வந்த 2 வயது தம்பி, பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.. தாய் கண்முன் பறிபோன உயிர்.!
கொய்யாப்பழம் பறிக்க முயன்று சோகம்
இதனிடையே, சிறுவன் சம்பவத்தன்று கிராமத்தில் இருக்கும் சங்கரின் வயலில் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, அருகே இருந்த கொய்யா மரத்தில், கொய்யாப்பழம் பறிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது தவறி விழுந்தவர், கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் சிறுவன் நீரில் மூழ்கி பலியான நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்காவை வழியனுப்ப வந்த 2 வயது தம்பி, பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.. தாய் கண்முன் பறிபோன உயிர்.!