Watch: பாண்டிச்சேரி: ஓடும் வாகனத்தில் கர்ப்பிணியிடம் செயின்பறிப்பு.. தவறி விழுந்த தம்பதி.. நடுங்கவைக்கும் காட்சிகள்.!
நெஞ்சமெல்லாம் பதறுதே.. கர்ப்பிணியிடம் செயின்பறிப்பு.. தவறி விழுந்த தம்பதி.. பதறவைக்கும் காட்சிகள்.!
செயின் பறிப்பு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதே பல உயிர்களை எதிர்காலத்தில் காப்பாற்றும்.
இன்றளவில் சாலைகளில் பயணிக்கும்போது, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. நம்மை நமக்கே தெரியாமல் பின்தொடர்ந்து, நாம் எதிர்பாராத சூழ்நிலையில் செயின் பறிப்பு நிகழ்வுகள் அதிகம் நடத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!
இவ்வாறே செயின் பறிப்பு செயலில் ஈடுபடும் குற்றவாளிகள், நகைக்காக வாகனத்தில் செல்வோரை கீழே இழுத்து அவர்களின் உயிருக்கும் பெரும் குந்தகத்தை ஏற்படுத்தி குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர்.
வீடியோ நன்றிநியூஸ் 18 தொலைக்காட்சி
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள 45 அடி சாலை பகுதியில், கடந்த நவ.24 அன்று இரவு 10:50 மணியளவில் தம்பதியிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இருசக்கர வாகனத்தில் பொறுமையாக சென்ற தம்பதியை, வாகனத்தில் இருந்தவாறு இளைஞர் செயினை பறித்துச் சென்றார்.
இதனால் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அவர்கள் உடனடியாக பிற பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செயின் பறிப்பில் உயிர்தப்பிய தம்பதியில், பெண் கர்ப்பிணி எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: டீ இல்லை., தின்பண்டத்துக்கு காசு கொடுக்கணுமா? - பேக்கரி கடையில் சரமாரி தாக்குதல்., போதை கும்பலை கையும் களவுமாக பிடித்த போலீஸ்.!