முன்விரோதத்தில் பயங்கரம்.. தலை துண்டித்து கொடூர கொலை.. 2 பேர் வெறிச்செயல்.!
முன்விரோதத்தில் பயங்கரம்.. தலை துண்டித்து கொடூர கொலை.. 2 பேர் வெறிச்செயல்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி, பத்தக்காடை கிராமத்தில் வசித்து வருபவர் சேசுராஜ். இவருக்கு சொந்தமாக தென்னை தோப்பு அப்பகுதியில் உள்ளது.
இதனிடையே, நேற்று அதிகாலை நேரத்தில், தலை துண்டிக்கப்பட்ட சடலம் ஒன்று தென்னை தோப்பு பகுதியில் இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சடலம் மீட்பு & காவல்துறை விசாரணை
தகவல் அறிந்து வந்த மணமேல்குடி காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில், கொலை செய்யப்பட்டது மணமேல்குடி, பொன்னகரம் பகுதியில் வசித்து வரும் மீனவர் சத்திய நாராயணன் (வயது 45) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சடலத்தின் தலை புதரில் இருந்து மீட்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
கொலையாளிகளை தேடிய காவல்துறையினர் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் (வயது 50), நாடிமுத்து (வயது 36) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம்; தங்கை தற்கொலை., காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி.!