#JustIN: அரசுப்பேருந்து மோதி பயங்கரம்; 5 மாத கைக்குழந்தை மரணம்.. பரமக்குடியில் சோகம்.!
#JustIN: அரசுப்பேருந்து மோதி பயங்கரம்; 5 மாத கைக்குழந்தை மரணம்.. பரமக்குடியில் சோகம்.!

பரமக்குடி பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில், 5 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி, தம்பதிகள் தங்கள் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர்.
அரசு பேருந்து மோதி விபத்து
அப்போது, தம்பதிகளுக்கு பின்னால் வந்த அரசுப்பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. இந்த நிகழ்வில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 5 மாத கைக்குழந்தை பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: லாரி உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் பரிதாப பலி.!
குழந்தை பலி., தம்பதி படுகாயம்
மேலும், தம்பதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மேற்படி விபரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் உயிரிழந்தது 5 மாத கைக்குழந்தை ருத்ரன் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: சென்னை: கேரட் சாப்பிட்ட 2 வயது சிறுமி மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!