#Breaking: பெட்ரோல் குண்டு வீசி 21 வயது இளைஞர் கொலை.. அன்புமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி.!
#Breaking: பெட்ரோல் குண்டு வீசி 21 வயது இளைஞர் கொலை.. அன்புமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி.!

வடதமிழ்நாட்டில் அரசியல் இலாபத்திற்காக இருபெரும் சமுதாய மக்களை விரோதிகளாக மாற்றி வாக்கு அரசியல் நடப்பதாக அன்புமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, திருமால்பூர் பகுதியில் வசித்து வந்த இளைஞர்கள் கணபதி, தமிழரசன் ஆகியோரின் மீது சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் தமிழரசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: துண்டான 3 விரல்கள்: பேருந்தின் ஜன்னல் வழியே கைகளை நீட்டியதால் பயங்கரம்.!
அன்புமணி நேரில் சந்தித்தார்
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் விசிக கட்சியின் நிர்வாகி என்றும், பிற 5 பேர் விசிக ஆதரவாளர்கள் எனவும் பாமகவினர் குற்றசாட்டு முன்வைக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பாமக தலைவர் அன்புமணி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஏற்கனவே நேரில் சந்தித்து இருந்தார். இதனிடையே, தமிழரசனின் மறைவு நடந்தது.
21 வயது இளைஞர் கொலை
இதனால் பாமக தலைவர் அன்புமணி கடுமையான வருத்தத்துடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், "தமிழரசன், விநாயக கணபதி ஆகியோர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை நேரத்தில் தமிழரசன் உயிரிழந்தார். எங்களுக்கு மிகுந்த வருத்தம். சோகத்தில் நாங்கள் இருக்கிறோம். 21 வயதான துடிப்பான இளைஞர் இன்று இல்லை. எதிர்கால திட்டத்துடன் இருந்த இளைஞனை, பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் அளவு துணிச்சல், தைரியம் அங்குள்ள சிலருக்கு இருக்கிறது.
ஒரு தலைவரின் தூண்டுதல்
மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். இதுவரை காரணமாக இருந்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், இது தனிப்பட்ட நிகழ்வு இல்லை. சமீபகாலமாக வடதமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. வேண்டும் என்றே, ஒருசில தலைவரின் தூண்டுதலால் நடைபெறுகிறது. எங்களின் தொண்டர்களுக்கு நாங்கள் வலியுறுத்துவது படியுங்கள், வழக்குகள் வரக்கூடாது என்பதுதான்.
விசிகவை சேர்ந்தவர்கள்
ஒருசில இயக்கத்தின் தலைவர்கள் அத்துமீறி, அடங்காமறு, அடி, வெட்டு என கூறுகிறார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து பெட்ரோல் ஊற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் காவல்துறையின் கையாலாகாத்தனம் தான். இவர்கள் திருமால்பூர் பகுதியை சேர்ந்தவர். ஒருவர் விசிகவை சேர்ந்தவர். பிறர் விசிக ஆதரவாளர்கள். இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பிரித்தாளும் சூழ்ச்சியில் திராவிட மாடல் அரசியல்
நாங்கள் எங்களின் கட்சியினரை அமைதிப்படுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முற்பட்டு இருக்கிரோம். ஆனால், ஒருவர் அடங்காமறு என பேசி, அவரின் ஆதரவாளர்களை தவறான பாதைக்கு அழைத்துசென்றுவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பகுதி பதற்றத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்கு அரசியலுக்காக, இரண்டு சமுதாயத்தை சண்டையிட வைத்து பிரச்சனை செய்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசியலா? இருபெரும் சமுதாயத்தை முன்னேற்ற எந்த யோசனையும் இல்லை, பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறார்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்தால் 15,000 ஐடி வேலை; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.!