14 வயது சிறுமியை கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த 35 வயது தாய்.. நண்பனுக்கு பெரும் துரோகம் இழைத்த நட்பு.. பதறவைக்கும் பின்னணி.!
14 வயது சிறுமியை கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த 35 வயது தாய்.. நண்பனுக்கு பெரும் துரோகம் இழைத்த நட்பு.. பதறவைக்கும் பின்னணி.!

நண்பர் தானே என நம்பி வீட்டுக்குள் அனுமதித்ததற்கு, லாரி ஓட்டுநர் இழைத்த பெரும் துரோக கொடுமை அதிர்ச்சியை தந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அங்குள்ள அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியே இருந்தபோது, அதே பகுதியில் வசித்து வந்த லாரி ஓட்டுனர் குமரேசன் (வயது 50), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விஷயம் தொடர்ந்து வந்த நிலையில், சிறுமி இதுதொடர்பாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவர் சிறுமியின் தந்தையிடம் தகவல் தெரிவிக்கவே, இதன்பேரில் சேலம் குழந்தைகள் நலத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம்:
இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, லாரி ஓட்டுனர் குமரேசனுக்கும் - சிறுமியின் தாய் சசிகலாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர். தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்தனர்.
இதையும் படிங்க: காதலித்து குத்தமா? இளம்பெண் கொடூர கொலை.. முக்கோண காதலால் சேலத்தில் நடந்த பயங்கரம்.!
கள்ளக்காதலால் விபரீதம்
கடந்த பிப்.17 அன்று தனது மகளை கள்ளகாதலருடன் தனிமையில் இருக்க வேண்டும் என சசிகலா கட்டாயப்படுத்தி இருக்கிறார். இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை பலவந்தப்படுத்தி சீரழித்த குமரேசன், இதனை யாரிடமும் சொன்னால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இவ்வாறாக பிப்.20, மார்ச் 03 என சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். ஒரே நாளில் இரண்டு முதல் மூன்று முறை வரையில் அத்துமீறல் தொடர்ந்துள்ளது. இந்த விசயத்திற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார்.
விசாரணையில் உண்மையை கண்டறிந்த காவல்துறையினர் குமரேசன், சசிகலா (35) ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், லாரி ஓட்டுநர் குமரேசன், சிறுமியின் தந்தைக்கு நண்பர் ஆவார். நண்பர் தானே என நம்பி வீட்டுக்குள் அனுமதித்ததற்கு, குமரேசன் இழைத்த பெரும் துரோக கொடுமை அதிர்ச்சியை தந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்த்து விபத்து; 10 மாணவ-மாணவியர்கள் காயம்.!