சிவகங்கை: பசு மீது விழுந்த மின்சார கம்பி; காப்பாற்ற முயன்ற பெண் பலி.!
சிவகங்கை: பசு மீது விழுந்த மின்சார கம்பி; காப்பாற்ற முயன்ற பெண் பலி.!
மின் வயர் விழுந்ததில், மின்தாக்குதலுக்கு உள்ளாகிய பசுவை காப்பாற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், சில்லம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கவள்ளி. இவர் தனது வீட்டில் பசு மாடு ஒன்று வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று, பசுமாடு மீது மின் கம்பி அருந்து விழுந்ததாக தெரிய வருகிறது. இதனால் பதறிப்போன பெண்மணி, மின் வயரை கையால் எடுத்து பதற்றத்தில் தூக்கி எறிந்த எரிய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் சோகம்; 2 தொழிலாளர்கள் பரிதாப பலி., வீடு இடிந்து-விழுந்ததால் சோகம்.!
மின்சாரம் தாக்கி பலி
இந்த சம்பவத்தில் மாணிக்கவள்ளியின் உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்து திருப்பத்தூர் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், குரங்குகளின் தொடர் அட்டகாசம் காரணமாக மின் வயர் அருந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனத்துறையினர் வனப்பகுதியில் விட வேண்டும் எனவும் கோரிக்கை இழந்துள்ளது.
இதையும் படிங்க: அரக்கோணம்: சுவரில் பாய்ந்த மின்சாரம்; சிறுவன் பரிதாப பலி.!