2 வயது சிறுமிக்கு எமனான மாடிக்கம்பி படிக்கட்டு.. தவறி விழுந்து துள்ளத்துடிக்க குழந்தை பலி.. தாம்பரத்தில் சோகம்.!
2 வயது சிறுமிக்கு எமனான மாடிக்கம்பி படிக்கட்டு.. தவறி விழுந்து துள்ளத்துடிக்க குழந்தை பலி.. தாம்பரத்தில் சோகம்.!

படிக்கட்டு இடைவெளி வழியே கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், மணிமங்கலம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் வசித்து வரும் நபர் பாலகுமாரன் (வயது 35). இவருக்கு வித்யா என்ற 30 வயதுடைய மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு 2 பெண்கள் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு தர்ம அடி.. இரயில் பயணத்தில் சம்பவம்.!
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில், வித்யா துணிகளை காயவைக்க, இரண்டரை வயது இரண்டாவது மகள் ஆருத்ராவுடன், குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்று இருக்கிறார். அச்சமயம், மாடி படிக்கட்டு கம்பி வழியே குழந்தை தவறி விழுந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி பலி
வித்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிமங்கலம் காவல்துறையினர் விசரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: தாம்பரத்திற்கு தென்மாவட்ட பேருந்துகள் இனி செல்லாது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!