மலையில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்; பரிதாப பலி.!
மலையில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்; பரிதாப பலி.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சிவகிரி, இந்திரா மேலத்தெருவில் வசித்து வருபவர் சிவலிங்கம். இவரின் மகன் முருகேசன் (வயது 32). இவர் தேநீர் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, பந்தல் அலங்கார வேளைக்கு பயன்படுத்தப்படும் கூந்தப்பனை வெட்ட, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புல்முட்டை பகுதிக்கு சென்றுள்ளார். இவருடன், அவரது நண்பர்களும் சென்றுள்ளனர்.
கால் இடறி சோகம்
இந்நிலையில், மலை ஏறியபோது, மலையில் இருந்து தவறி விழுந்த முருகேசன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விசயம் குறித்து சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எலுமிச்சை பறிக்கச் சென்று உயிரைவிட்ட பெண்; அலட்சிய அதிகாரிகளால் திருவள்ளூரில் சோகம்.!
இதையும் படிங்க: குளிருக்கு மூட்டிய தீ துணியில் பற்றி மூதாட்டி பலி; நொடியில் நடந்த சோகம்.!!