தஞ்சாவூர்: "அப்பா திரும்பி வாப்பா" - தந்தை நீச்சல் அடிப்பதாக நினைத்த மகள்கள் கண்முன் நடந்த சோகம்.!
தஞ்சாவூர்: அப்பா திரும்பி வாப்பா - தந்தை நீச்சல் அடிப்பதாக நினைத்த மகள்கள் கண்முன் நடந்த சோகம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வந்த குடும்பத்தினர், சம்பவத்தன்று அங்குள்ள கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் நல்ல மழையை தந்த வடகிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனிடையே, குடும்பத்தினருடன் கால்வாய்க்கு சென்றவர்களில், தந்தை நீரில் விழுந்து குளித்துள்ளார். அச்சமயம், தலையில் அவர் படுகாயமடைந்ததாக தெரியவரும் நிலையில், சுயநினைவு இழந்து நீரில் தத்தளித்து இருக்கிறார்.
மகள்கள் கண்முன் சோகம்
அப்போது, வீடியோ எடுத்த அவரின் மகள்கள், தந்தை நீச்சலடித்து மகிழ்வதாக பின்னனியில் பேசி இருக்கின்றனர். இதனிடையே, நீரின் பிடியில் இழுத்து செல்லப்பட்டவர் உயிரிழந்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள், அவரின் சடலத்தை மீட்டனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையின்போது சோகம்; வீட்டை சுத்தம் செய்த பெண் பலி.!
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோ வைரலாகி வருகிறது. மேற்படி விபரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: காந்திமதி யானை உடல்நலக்குறைவால் பலி: அண்ணாமலை இரங்கல்.!