இனி கொள்ளை அடிக்கமுடியாது ...திரையரங்குகளில் விதிக்கப்பட்ட அவசர உத்தரவு, மீறினால் அதிரடி நடவடிக்கை.!
In theatre do not sale the snacks in high rate
திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக அந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனால் தொழிலாளர் துறை அமைப்பினர் சில சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்து ஆய்வினை மேற்கொண்டனர்.அப்பொழுது பல திரையரங்குகள் அதிக விலைக்கு உணவுப்பண்டங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது
இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தொழிலாளர் துறை, உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்ற 72 கேண்டீன் உரிமையாளர்கள், 38 திரையரங்குகள் மற்றும் 4 உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் சம்மந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் மீது கடுமையான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.